இந்திய ராணுவ தளபதியாக 2022 ஏப்ரல் 30 முதல் 26 மாதங்களாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் மே 31-டன் நிறைவு பெற்றது. எனினும், தேர்தலையொட்டி மத்திய அரசு நீட்டித்திருந்தது. இதையடுத்து அவர் இன்றுடன் ஓய்வு பெற்றார். எனவே அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் வைத்து ராணுவ வீரர்கள் மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது. புதிய தளபதியாக உபேந்திர திவேதி நாளை பதவியேற்கிறார்.