அமைச்சர் துரைமுருகன் பேசியது அவரின் பதவிக்கும், அரசியல் அனுபவத்திற்கும் உகந்ததல்ல என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் விற்கும் மதுபானங்களில் கிக் இல்லை என்றும், அதனால் தான் கள்ளச்சாராய கடைகளுக்கு செல்கின்றனர் என்றும் உழைக்கும் மக்களின் உடல் வலியை போக்குவதற்கு மது தேவை என சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது அவரின் பதவிக்கும், அரசியல் அனுபவத்திற்கும் உகந்ததல்ல.
தமிழகத்தில் தற்போது பூரண மதுவிலக்கு கொண்டுவருவதற்கு எந்தவொரு சாத்தியக்கூறும் இல்லையென கூறிய அமைச்சர் முத்துசாமியின் பேச்சும் கண்டனத்திற்குரியது. மதுபானங்கள், கள்ளச்சாராயங்கள் மற்றும் புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை தடை செய்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.