இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கும் திரைப்படம் “பாட்டல் ராதா”. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்டும் திரைப்படமாக இருக்கும் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.