2024 டி20 உலகக்கோப்பை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நான் இறுதிப்போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதால் தான், போட்டியை பார்க்கவில்லை. இந்திய அணி வென்றதை அறிந்து கண்ணீர் வடித்தேன் எனக் கூறிய அவர், நான் மேட்ச் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்ற தோற்றம் உலா வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.