மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், 150 ஆண்டுகளாக பின்பற்றபட்டு வரும் ஐபிசி, சிஆர்பிசி, ஐஇஏ ஆகிய குற்றவியல் சட்டங்கள் கைவிடப்பட்டு, பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ்ஏ ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின், இந்த சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியானது.