திருப்பூர் மாவட்டம் மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருவதாக இபிஎஸ் எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.