கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றது. இதற்கு அரசு மதுபானங்கள் தீர்வு கிடையாது. மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால் மட்டும்தான் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும். முழு மதுவிலக்கு கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்பட உள்ள நிலையில் இடம் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.