தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவர் நியமிப்பது குறித்து கட்சியின் தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவியல் என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக அண்ணாமலை நான்கு மாதங்கள், லண்டன் செல்ல உள்ளதால், மாற்று தலைவருக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.