மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார். இந்தக் குழு பொதுமக்களிடம் கருத்து பெற்ற விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.