திராவிட மாடலில் ‘கிக்’தான் முக்கியம் என்று நினைப்பதாக, அமைச்சர் துரைமுருகனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மறைமுகமாக சாடியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரணம் அறிவிப்பதில் அரசு அனைவருக்கும் சமமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றார். பரபரப்பான பிரேக்கிங் செய்திகளில் வரும் பிரச்னைகளுக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.