அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. உண்மையை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும், யாரையும் அவதூறு செய்ய தாங்கள் முயற்சிக்கவில்லை எனவும் மேதா பட்கர் கூறியுள்ளார்