குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு பதிலளிக்கவுள்ளார். மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரம், அக்னிபாத் திட்டம், மணிப்பூர்
கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நாளை பதிலளிக்கிறார்.