தென் கொரியாவின் மத்திய சியோலில் போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த பாதசாரிகள் மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். பயணிகள் கார் தவறான பக்கமாகச் சென்று பாதசாரிகள் மீது மோதியுள்ளது. அதற்கு முன் அங்கு நின்றிருந்த 2 வாகனங்கள் மீதும் அந்த கார் மோதியதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 60 வயதான காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.