பிரதமர் மோடியை தவெக தலைவர் விஜய் ஆதரிப்பார் என்று விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் மோடியின் திட்டங்களை விஜய் ஆதரிப்பார் என்றும், அவரின் அரசியல் வருகை பாஜகவை ஒருபோதும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.