மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்திய அணியின் டி20 உலக கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு பட்டாசு வெடித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்பவர் பட்டாசு மீது டம்ளர் வைத்து வெடித்துள்ளார். அப்போது டம்ளர் வெடித்து சிதறியதில் அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் குத்தி உள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.