மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா பேசுகையில், நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன், வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன். நான் எதைப் பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்படமாட்டேன் என்று அனல்பறக்க பேசியுள்ளார்.