அசாமை சேர்ந்த அப்தாப் அலி, தனது சகோதரனுடன் பெரம்பூரில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது கையிலிருந்த செல்போனை 2 பேர் பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார், BNS சட்டம் 304(2) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், நடேசன் சாலையை சேர்ந்த சாரதியை, பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்ததாக 77ஆவது பிரிவின்கீழ் ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர்.