மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையில் இடம் பெற்ற பல வரிகள் நீக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒன்றிய பாஜக அரசு மீதான விமர்சனங்களும், அதானி, அம்பானி மீதான விமர்சனங்களும் நீக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, மோடிஜியின் உலகில், உண்மையை அழிக்க முடியும், ஆனால் உண்மையில், உண்மையை அகற்ற முடியாது, நான் சொல்ல வேண்டியதை நான் சொன்னேன், அதுதான் உண்மை என தெரிவித்துள்ளார்.