‘கூழாங்கல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலக அளவில் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் பிரபலப்படுத்தினார். இவர் அடுத்ததாக சூரி நடிப்பில் ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படமும் பெர்லின் மற்றும் டிரான்சில்வேனியா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற FEST திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த படத்திற்கான ‘GOLDEN LYNX AWARD’விருதைப் பெற்றுள்ளது.