மக்களவையில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய ரையில் பல பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் உண்மையான கள நிலவரத்தையே தனது பேச்சில் குறிப்பிட்டதாகவும், காரணமற்ற முறையில் தனது உரையின் முக்கிய பகுதிகளை சபாநாயகர் நீக்கியது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.