விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய நாடே பெருமை கொள்ளும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் முழுமையாகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.