செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ள இயக்ககம், செமஸ்டர் தேர்வுகளை நவம்பர் 4 முதல் நவம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் தேர்வு முடிவுகளை டிசம்பர் 21ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.