அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் நடவடிக்கையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை (ஜூலை 3) முதல் ஜூலை 5-ம் தேதி வரை https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.