‘ராயன்’ இசை வெளியீட்டு விழா தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ வருகிற 26ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷின் 50ஆவது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.