தேசமே தங்களுக்கு முதன்மையானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான நோக்கத்தை தங்கள் அரசு பூர்த்தி செய்துள்ளதாகவும், 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டை வல்லரசாக மாற்ற வாரத்தின் 7 நாள்களும், 24 மணி நேரமும் உழைக்க தங்கள் அரசு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.