மகாராஷ்டிர மாநிலம் மல்காபூரில் தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.