தவெக சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடிகர் விஜய்யின் ‘தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.