கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மலை கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்றிய அவசரகால மருத்துவ நுட்புனர் பவுல்ராபின்சன், ஓட்டுனர் மகேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.