தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் விடுபட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்ட நிலையில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 15 முதல் அவர்களது வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.