தேசிய நல்லாசிரியர் விருது 2024 பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆசிரியர்கள் தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தேர்வாகும் 50 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கிய கௌரவிப்பது குறிப்பிடத்தக்கது.