திமுக ஆட்சியை திராவிடம் மாடல் ஆட்சி என்றழைப்பதற்கு பதிலாக போதைப்பொருள் ஆட்சி என்று கூறலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். திமுக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் அரசு இதுவரை எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் யாருமே முன் வருவதில்லை என்றும் சாடியுள்ளார்.