பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் கால் பதித்த இளம் இயக்குனர் அட்லீ, அடுத்ததாக சல்மான் கான் உடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் வகையில் அதிரடி ஆக்சன் கதை அம்சத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.