உலகின் மிக நீளமான சைக்கிளை நெதர்லாந்தை சேர்ந்த எட்டு பொறியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 180 அடி 11 அங்குலம் நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டச்சு பொறியாளர்கள் குழுவின் தலைவரான இவான் ஷால்க் (39) தனது சிறுவயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க என்ற கனவோடு இருந்துள்ளார். அந்தக் கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார்.