கள்ளக்குறிச்சியில் இறந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பதும் வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி, அதில் போதையை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால், கள்ளக்குறிச்சியில் மெத்தனாலை நேரடியாக தண்ணீரில் கலந்து குடித்திருக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் யார் என்று தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.