நீட் தேர்வு பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்று தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே ஒரே தீர்வு என்று கூறிய அவர், தற்காலிக தீர்வாக சிறப்பு பொதுப் பட்டியல் உருவாக்கி கல்வியை அதில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்மூலம். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் விஜய் பேசினார்.