மெக்சிகோவில் உள்ள தமௌலிபாஸ் மாகாணத்தில் உள்ள துலா நகருக்கு அருகே சமீபத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பூமி இரண்டாகப் பிளந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் மூன்று கிலோமீட்டருக்கு நிலம் இரண்டாகப் பிரிந்தது. பூமி பிளவுபட்டதால் மக்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். என்ன அச்சுறுத்தல் வரப்போகிறதோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.