இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்று ராயல் என்ஃபீல்டு புல்லட் 350. இந்த பைக்கின் வடிவமைப்பு மாறிவிட்டது என்றாலும், பைக்கின் டிசைன் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது. இளசுகள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ள இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 தற்போது ரூ. 1,50,795 முதல் ரூ. 1,65,715 விலையில் விற்கப்படுகிறது. ஆனால், 1986ஆம் ஆண்டு புல்லட்டின் விலை 18,700 ரூபாய் மட்டும் தான்.