நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து அஜித் அவசரமாக சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.