நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் இன்று குரல் கொடுத்தார். ஏற்கெனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, தேமுதிக, பாமக என அனைத்து முன்னணி கட்சிகளுமே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.