கர்நாடகாவில் பானிபூரி, பானி போன்றவற்றின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் தீவிர சோதனைகள் நடைபெறுகிறது. சென்னையில் சோதனை மேற்க்கொண்ட உணவுத்துறை அதிகாரி கூறும் போது, ”சுகாதாரமான பானிபூரியை தாராளமாக சாப்பிடலாம், ஆனால் பானிபூரி மற்றும் பானியானது மிகவும் கலராக இருந்தால் அதை குடிக்கக்கூடாது, மீறினால் சுகாதார கேடு ஏற்படும்.” என்றார்.