இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு, டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. இதை தொடர்ந்து, இந்திய வீரர்கள் பார்படாஸில் இருந்து நாளை டெல்லி வரவுள்ளனர். இந்நிலையில், கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ள ரோகித் சர்மா, ஸ்பெஷலான தருணத்தை ரசிகர்களுடன் கொண்டாட விரும்புவதாகவும், அனைவரும் வான்கடே மைதானத்தில் தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளார். கோப்பை வீட்டுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.