நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வசூலில் மகத்தான சாதனை படைத்து வருகின்றது. படம் வெளியாகி 6 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ.680 கோடி ரூபாய் அளவில் வசூலித்திருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வார இறுதிக்குள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் கமலஹாசன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.