மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் 7 நாட்கள் நீடித்தால் மருத்துவமனைக்கு உடனடியாக சென்று காண்பிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.