தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.