மக்களவையில் ராகுல் காந்தி பல பொய் குற்றச்சாட்டுகளை கூறியதாக பாஜக MP ஒருவர் சபாநாயகரிடம் நேற்று நோட்டீஸ் கொடுத்தார். இந்நிலையில், மக்களவையை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எந்த உறுப்பினரும் எளிதில் தப்பிக்க முடியாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், அனைவருக்கும் பொதுவான விதிகள்தான், ஒரு குறிப்பிட்ட குடும்பம் என்பதற்காக சலுகை காட்டப்படாது எனவும் கூறியுள்ளார்.