ஹரியானா, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் INDIA கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியும், டெல்லியில் ஆம் ஆத்மியும் வெற்றியை குறி வைத்துள்ளதால், இருவரும் இணைந்து போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.