தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்த நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கான அவகாசம் ஜூலை 5 இன்றுடன் நிறைவடைவதால் மாணவர்கள் https://www.tngasa.in/என்ற இணையதளத்தில் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை எட்டாம் தேதி தொடங்குகிறது.