ஆந்திர மாநில துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண், மக்கள் பணிக்கே முதலில் முன்னுரிமை கொடுப்பதாகவும் அதன் பின்னரே சினிமாவில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், அவரது ரசிகர்கள் அவரது புதிய படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு இவ்வாறு பதிலளித்த பவன் கல்யாண், இந்த தொகுதியை சிறப்பாக மாற்றுவதாக நான் கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார்.