வாடகை தாய் மூலம் தாயான பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு எடுக்கும் உரிமை உண்டு என்று ஒடிசா ஹை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று தாயான நிதித்துறை அதிகாரிக்கு ஊதியத்துடன் கூடிய 180 நாள் விடுப்பு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், எப்படி தாயானார் என்பது முக்கியமில்லை குழந்தையை பராமரிக்க விடுப்பு அவசியம் என்று தீர்ப்பளித்துள்ளது.