இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை எனக் கூறிய அண்ணாமலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் ஞானி போல பேசும் அவருக்கு, ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தெரியும் என்றும் சாடியுள்ளார். மேலும், அவர் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகவும், தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் வாயில் வடை சுடுவதாகவும் விமர்சித்துள்ளார்.